Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.நா. அகதிகள் மாநாடும் அவுஸ்திரேலியாவின் நிலையும்: இலங்கை தமிழ் அகதிகளுக்கு புகலிடம் கிடைக்குமா?

September 23, 2016
in News, Politics
0
ஐ.நா. அகதிகள் மாநாடும் அவுஸ்திரேலியாவின் நிலையும்: இலங்கை தமிழ் அகதிகளுக்கு புகலிடம் கிடைக்குமா?

ஐ.நா. அகதிகள் மாநாடும் அவுஸ்திரேலியாவின் நிலையும்: இலங்கை தமிழ் அகதிகளுக்கு புகலிடம் கிடைக்குமா?

ஐக்கிய நாடுகள் சபையின் 71 வது கூட்டத்தொடரின் ஒரு அங்கமாக அகதிகள் மற்றும் புலம்பெயர்பவர்கள் தொடர்பான ஐ.நா.வின் மாநாடும் நடைப்பெற்றிருக்கிறது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் எப்போதும் இல்லாத அளவில் 2.13 கோடி அகதிகள் பாதுகாப்பான நாடு இன்றி தவிப்பதனை ஐ.நா. சுட்டிக்காட்டியிருக்கிறது.

கடல் வழியாக அவுஸ்திரேலியாவை அடைய முயற்சிப்பவர்களுக்கு ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் வாழ இடமளிக்கப்படாது என்ற நிலையுடன் ஐ.நா.அகதிகள் மாநாட்டிற்கு சென்றது அவுஸ்திரேலிய அரசு.

அங்கு பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையே சிறந்தது என்றும் நாட்டின் எல்லைப் பாதுகாப்பை எப்படி இறுக்கமாகப் வைத்திருப்பது என்பதை அவுஸ்திரேலியாவின் முன்னுதாரணத்திலிருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

படகினை திருப்பி அனுப்புதல், நவுறு மற்றும் மனுஸ் தீவு போன்ற அகதிகள் தடுப்பு முகாம்களில் கையாளும் முறைகள் குறித்து அவுஸ்திரேலியா மீது Save the Children, Oxfam, Vinnies’ National Council போன்ற அமைப்புகள் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தன.

இக்கூட்டத்திற்கு வருகைத் தந்திருந்த இலங்கை ஜனபதிபதி சிறிசேனவும் அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லும் சந்தித்தபொழுது கடல் வழியாக அவுஸ்திரேலியாவை அடைய முயற்சிப்பவர்கள் தொடர்பாகவும் விவாதித்திருந்தனர்.

இந்த நிலையில், மனிதாபிமான நடவடிக்கையின் கீழ் 2015-16 அவுஸ்திரேலியா கொடுத்துள்ள அகதிகள் விசா விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஈராக், சிரியா, மியான்மர், ஆப்கானிஸ்தான், காங்கோ, பூட்டான், சோமாலியா, ஈரான், எத்தியோபியா, எரித்திரியா நாட்டினரை சேர்ந்தவர்களுக்கு அகதிகள் விசா பிரதானமாக வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 17,555 அகதிகள் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த கணக்குள் படி கடைசியாக 2010-11 ஆண்டிலேயே இலங்கை அகதிகளுக்கு அதிகமாக அகதிகள் விசா வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இலங்கையில் போர் முடிவுற்று இரண்டு ஆண்டுகள் வரை விசா வழங்கப்பட்டுள்ளது.

போர் முடிவிற்கு பிறகும் இராணுவமயமாக்கல் போன்ற பிரச்னைசிகளால் இலங்கையில் பாதுகாப்பற்ற தொடர்ந்து நிலவி வருகிறது.

இதனால் இலங்கை அகதிகள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் முயற்சியினை இன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 44 தமிழ் அகதிகள் இந்தோனேசியா அருகே தத்தளித்து வந்த சம்பவமும் நிகழ்ந்திருந்தன.

அவுஸ்திரேலிய அரசைப் பொறுத்தமட்டில் இலங்கை அகதிகளை பொருளாதார புகலிடக்கோரிக்கையாளர்களாக முத்திரைக் குத்தும் செயல்கள் நடந்துவருகின்றன.

இதனால் இலங்கை அகதிகளின் பெருமளவு புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.

Tags: Featured
Previous Post

இலங்கையில் தொடரும் இனப்படுகொலை! அம்பலமாக்கப்படும் அரசின் பொய்கள்

Next Post

கனடா விஞ்ஞானிகளின் உலக சாதனை! மனித முடியை விட சிறிய தேசியக் கொடி வடிவமைப்பு!

Next Post
கனடா விஞ்ஞானிகளின் உலக சாதனை! மனித முடியை விட சிறிய தேசியக் கொடி வடிவமைப்பு!

கனடா விஞ்ஞானிகளின் உலக சாதனை! மனித முடியை விட சிறிய தேசியக் கொடி வடிவமைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures