ஐ.எஸ் படுகொலைக்கு உதவிய 36 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஈராக்கில் 2014ம் ஆண்டில் நடந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 36 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
36 பேரும் தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதனை திக்கார் ஆளுநர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.
2014ல் நடைபெற்ற இந்தப் படுகொலைகளின் போது, சுமார் 1,700 ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
ஸ்பீச்செர் முகாம் படுகொலைகள் என பிரபலமாக அறியப்பட்ட இந்த சம்பவம், ஈராக்கின் தெற்கே அமைந்த ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் திக்கார் மாகாணத்தில் இருந்து 400 பேர் வரை பலியாகினர் என்பது நினைவுக் கூரதக்கது.