ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட விளம்பர வீடியோவில் ஆசிய மாணவர்கள்

ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட விளம்பர வீடியோவில் ஆசிய மாணவர்கள்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டது. அதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் அமெரிக்காவின் டெக்சாசில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். 22 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோவில் மேலும் பல இந்தியர்கள் இருப்பதும் தெரிய வந்துள் ளது. அவர்களில் முகமது சாஜித் என்கிற படா சாஜித், பாரூக் அலி இந்தி என்கிற அபு ரஷித் இவர் இருவரும் உத்தரபிரதேசம் அசம்காரை சேர்ந்தவர்கள், அபு சல்ஹ் அல் ஹிந்தி, பகத் ஷேக் என்கிற அபு அம்மர் அல் இந்தி இவர்கள் 2 பேரும் மராட்டி மாநிலம் கல்யானை சேர்ந்தவர்கள் அமன் தாண்டல் என்கிற அபு சல்மான் அல் இந்தி மற்றும் ஷகீம் தாங்கி இருவரும் தானேயையும் சேர்ந்த வர்கள் ஆவர். இந்த வீடியோ மே மாத 19 ந்தேதி வெளியிடப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 25 இந்தியர்கள் இருந்தனர். தற்போது அது 40 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே ஐ.எஸ்.இயக்கத்தின் வீடியோ குறித்து மிகவும் சீரியசான விசாரணை நடை பெற்று வருவதாக மத்திய மந்திரி நிரன்ரிஜு தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தியாவில் புனித போர் நடைபெறும். பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீரில் துன்புறுத்தல் போன்ற வற்றுக்கு பழி தீர்க்க நடவடிக்கை மேற் கொள்ளப் படும் என அதில் பேசிய நபர் தெரிவித்தான். இதுகுறித்து உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) ஆகியவை தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News