ஐ.எஸ் இலக்கு மீது விமானத் தாக்குதல்: 19 கட்டளைத் தளபதிகள் உயிரிழப்பு

ஐ.எஸ் இலக்கு மீது விமானத் தாக்குதல்: 19 கட்டளைத் தளபதிகள் உயிரிழப்பு

 

வட ஈராக்கின் நினிவே மாகாணத்தில் அமைந்துள்ள ஐ.எஸ் இலக்கு மீது அரச படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 19 ஐ.எஸ் கட்டளைத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் ஈராக்கிய கூட்டு படை நடவடிக்கை கட்டளைத் தளபதி நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தீவிரவாதிகளின் முற்றுகைப் பகுதியான கிழக்கு மொசூலில் உள்ள Sahel al-Aysar பிராந்தியத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய கட்டளைத் தளபதிகள் ஒன்றுகூடியிருந்த இடத்தில் ஈராக்கிய போர் விமானம் விமானத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்களில் nom de guerre Abu Yahya என தீவிரவாத வட்டாரத்தில் அறியப்படும், இப்பிராந்தியத்தின் ஐ.எஸ் ஆளுநராக செயற்பட்ட Ayad Hamed Mohal al-Jumail உள்ளடங்குவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை மொசூலின் பல பகுதிகளிலும் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல்கள் வலுத்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் வெளியேறி வருவதாகக் கூறப்படுகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *