ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தென் ஆசியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்த குழு மாலைதீவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
எதிர்வரும் 3 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் ஜீஎஸ்பீ வரிச்சலுகைக்கு ஏற்ப பின்பற்ற வேண்டிய சர்வதேச இணக்கங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை பின்பற்றும் விதம் மற்றும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளனர்.