ரொறொன்ரோ–11வயது பெண் ஒருவர் அப்பார்ட்மென்ட் ஒன்றின் ஐந்தாவது மாடி பல்கனியில் இருந்து விழுந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடந்துள்ளது.
செவ்வாய்கிழமை இரவு 6.45மணியளவில் விபத்து நடந்துள்ளது.அவ்விடத்திற்கு வந்த பொலிசாரும் தீயணைப்பு பிரிவினரும் பெண் தரையில் கிடக்க கண்டுள்ளனர். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டாள்.
பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாக அறியப்படுகின்றது. எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உயிராபத்து இல்லை எனவும் பொலிசார் பின்னர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த சமயம் பெண்ணின் தாயாரும் வீட்டில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் பல்கனியில் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சந்தேகத்திற்கிடமாதாக கருதப்படுகின்றது.