Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

July 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை நாளை (26) செவ்வாய்க்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமை இரத்து செய்யப்படும் என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை நாளை செவ்வாய்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் , ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த முறைமை பின்பற்றப்படும்.

அத்தோடு ஆகஸ்ட் முதலாம் திகதி வரை வாகன இலக்கத் தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமையும் நடைமுறையிலிருக்கும்.

தொழிநுட்ப சிக்கல்கள் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், அவை சரி செய்யப்படும் வரை வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

60 சதவீதமான இடங்களில் ஏற்கனவே இந்த முறைமை பரிசீலிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையில் எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமையளிக்கப்படும்.

சகல சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களிடமும் இந்த முறைமையை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படும்.

தேசிய எரிபொருள் அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்து , இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

தொழில் நிமித்தம் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு இவ்வார இறுதிக்குள் அது குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

அத்தோடு அவை அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படும். மின் பிறப்பாக்கிகள் மற்றும் வீட்டுத்தோட்ட இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான பதிவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்க்பபடும்.

பொலிஸ் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

அதன்படி ஒவ்வொரு முச்சக்கர வண்டிகளும் ஒரு குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்காக ஒதுக்கப்படும். டிப்போக்கள் அல்லது எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு ஒதுக்கப்படும் பேரூந்துகளை போக்குவரத்து அமைச்சு பதிவு செய்யும்.

சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கைத்தொழில் மற்றும் ஏனைய சேவை வழங்கும் துறைகள் எரிபொருள் நிலையங்களில் தங்களின் வாகனங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கியு.ஆர். முறைமை மாத்திரமே நடைமுறையிலிருக்கும். வாகன இலக்க தகட்டின் இறுதி எண் முறைமை இரத்து செய்யப்படும்.

எதிர்வரும் 10 நாட்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஜனாதிபதி கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் | முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்

Next Post

பெற்றோல் திருடியவரின் தாக்குதலில் வாகனத்தின் உரிமையாளர் பலி

Next Post
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

பெற்றோல் திருடியவரின் தாக்குதலில் வாகனத்தின் உரிமையாளர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures