Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

எம்.எல்.ஏ-வுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயி நெஞ்சுவலியால் மரணம்!

October 20, 2017
in World
0
எம்.எல்.ஏ-வுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயி நெஞ்சுவலியால் மரணம்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே அம்மா திட்ட முகாமில் எம்.எல்.ஏ-வுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயி நெஞ்சுவலியால் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ளது மேட்டுப்பாளையம் ஊராட்சி. அங்குள்ள கிராமநிர்வாக அலுவலத்தில் நேற்று அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர். அப்போது, “கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. கொசு மருந்து தெளிப்பதில்லை. கால்வாய் சுத்தம் செய்வது கிடையாது. பேருந்து வசதி இல்லை. உடைந்த ஏரியை இரண்டு வருடமாக சீரமைக்கவில்லை.“ எனப் பொதுமக்கள் சரமாரியாகப் புகார் எழுப்பினர். அப்போது சடகோபன் என்பவர், “நான் ஒரு விவசாயி. விவசாயம் செய்வதற்காக அருகிலுள்ள மாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் கேட்டால் கொடுப்பதில்லை. தொடர்ந்து அலைகழிக்க வைக்கிறார்கள். கடனைச் செலுத்திவிட்டு மீண்டும் கடன் கேட்பவர்களுக்குகூட கடன் அளிப்பதில்லை. இப்படியே போனால் மிச்சமிருக்கும் விவசாயமும் அழிந்து போகும்.” என எம்.எல்.ஏ பழனியை நோக்கி சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். உடன் இருந்தவர்கள் சடகோபனை சமாதானப்படுத்தி அமர வைத்தனர். மனம் நொந்த நிலையில், அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சுவலியால் துடித்த சடகோபனை அருகில் இருந்தவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தார்கள்.

சடகோபனின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதும் எம்.எல்.ஏ பழனியும், வருவாய்துறையினரும் அவசரஅவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

Previous Post

பயிர்க்காப்பீட்டுத் தொகைக்காக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

Next Post

தமிழகத்துக்கு தற்போது திடமான தலைமை இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Next Post
தமிழகத்துக்கு தற்போது திடமான தலைமை இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்துக்கு தற்போது திடமான தலைமை இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures