Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய!

May 25, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து இன்று வரை எதேச்சதிகாரமிக்க ஜனாதிபதியாகவே செயற்பட்டு வருகின்றார். எதுவென்றாலும் இராணுவத்தையே முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றார்.”

– இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகளினால் அவருக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் மாத்திரமின்றி அனைவரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஜனாதிபதி நாட்டின் அரசமைப்பை மீறி எதேச்சதிகார வழியில் செயற்பட்டு வருகின்றார்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு வரிப் பணத்தை அதிகரித்துள்ளனர். இதனால் சாதாரண மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி நாட்டு மக்களுக்கு  உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாய, ரின் மீனுக்கும் பருப்புக்கும் சலுகை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். தற்போது வரி அதிகரிப்பால் அந்தப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

அரசு மக்களுக்குச் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்கத் தன்னிடம் நிதி இல்லை என்று தெரிவித்துக்கொண்டு நெஞ்சாலைகளை அமைப்பதற்கும், பெருந்தெருக்களைப் புனரமைப்பதற்கும் மற்றும் விளையாட்டு அரங்கு அமைப்பதற்கும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடன் பெறுவது எவ்வாறு என்று சிந்தித்து வருகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த வேலைத்திட்டங்கள் அவசியம்தானா? தற்போது அரச தரப்பு அமைச்சர்களே ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் இவர்கள் அதனையே பாடுபொருளாய் கொண்டிருப்பார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செயற்பட மாட்டோம்.

நாட்டின் நிதி ஒதுக்கீடுகள் நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறுகின்றதா இல்லை ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் தலையீட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திகதி அறிவிக்கப்படாத நிலையிலும் தொடர்ந்தும் நிதி ஒதுக்கீடு செய்வது அரசமைப்புக்கு புறம்பான செயற்பாடாகும். இந்தநிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரே பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படும்” – என்றார்.

Previous Post

தேர்தலின் பின் ஐக்கியக் தேசியக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும்!

Next Post

நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

Next Post

நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

July 14, 2026
விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026
புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures