Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எதிரியும் பாராட்டக்கூடிய தலைவன்! தமிழ் இனத்திற்கான மதிப்புயர்ந்த சொத்து

September 9, 2016
in News, Politics
0
எதிரியும் பாராட்டக்கூடிய தலைவன்! தமிழ் இனத்திற்கான மதிப்புயர்ந்த சொத்து

எதிரியும் பாராட்டக்கூடிய தலைவன்! தமிழ் இனத்திற்கான மதிப்புயர்ந்த சொத்து

முற்றத்து மல்லிகைக்கு வாசமில்லை என்றொரு பழமொழி தமிழ் மொழியில் உண்டு.

நம்மிடம் இருக்கக் கூடிய திறமைகளை நாம் தெரிந்து வைத்திருப்பதில்லை. அந்தத் திறமையை நாம் உரக்கச் சொல்வதுமில்லை.

ஆனால் திறமைகள் ஒருபோதும் மழுங்கப் போவதில்லை என்பதுதான் உண்மை.

அந்தவகையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒரு பெரும் சிறந்த – ஒழுக்கமான – கண்ணியமான தலைவன் என்று இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன புகழாரம் சூட்டியுள்ளார்.

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கமால் குணரட்ன தனது சேவையின் சிறப்புப் பற்றியோ, அல்லது விடுதலைப் புலிகளை தோற்கடித்த பெருமை பற்றியோ கூறவில்லை.

மாறாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பெரும் வீரத்தலைவன் என்று புகழாரம் சூட்டினார் எனில் அது, அவரின் இதயத்திலிருந்து எழுந்த உண்மையான வார்த்தை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

ஒழுக்கமான – நேர்மையான ஆளுமை மிக்க தலைவன் பிரபாகரன் என்று அவரை எதிர்த்துப் போராடிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறுவது என்பது இந்த உலகில் எவருக்கும் கிடைக்காத புகழும் பெருமையும் எனலாம்.

ஆக, எதிரி கூட புகழாரம் சூடக்கூடிய தலைவன் தமிழனாகவே இருந்தான் என்றால் அது இந்த உலகம் இருக்கும் வரை எவரும் அழிக்க முடியாத – எம் இனத்திற்கான மதிப்புயர்ந்த சொத்து என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தோல்வி, வெற்றி என்பது வேறுவிடயம். போர் நெறிமுறைக்கு மாறாக – உலகில் தடைசெய்யப்பட்ட நச்சுக் குண்டுகளை வீசி, உலக நாடுகளின் உதவியைப் பெற்று ஒரு போராட்ட அமைப்பை தோற்கடிப்ப தென்பது சாத்தியப் படக்கூடியதே.

ஆனால், அந்தப் போராட்ட அமைப்பை முன்னெடுத்த தலைவன் எப்பேற்பட்டவன் என்பதை அவன் சார்ந்த இன மக்கள் புகழ்ந்துரைப்பதை விட எதிரி தரப்பில் இருக்கக் கூடிய இராணுவ அதிகாரி புகழ்வதென்பது வித்தியாசமானது.

இது தமிழினத்திற்கு ஏற்பட்ட போர்த் தோல்விகளை உடைத்தெறிந்து ஒரு விடுதலை போராட்டத்தின் தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான பாடமாக உலகிற்கு தரப்படுகிறது.

ஒரு தலைவனின் வாக்குப்பலம், ஒழுக்கம், கட்டுக்கோப்பு என்பன எதிரியால் புகழப்படுகிறது எனும் போது, ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பது உலகிற்கு அடையாளப்படுத்தப்படுகிறது என்பதே உண்மை.

அந்தவகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உலகிற்சிறந்த தலைவனாக எதிரிகளால் கூட அடையாளப்படுத்தப்படுகிறார் எனும் போது, அந்த உன்னதமான – உதாரணத்துக்குரிய தலைவன் எம் தமிழனாகவே இருந்தான் என்ற செய்தி எங்கள் நெஞ்சை உயர்த்தச் செய்கிறது.

ஓ உலகமே! தமிழினம் துடிதுடித்த போது நீ பார்த்து நின்றாய். ஆனால் உன்னதமான தலைவன் யார் என்பதை இப்போது நீ கண்டு கொண்டாயா என்று கேட்கத் துடிக்கிறது.

கூடவே பிரபாகரனின் பெயரைச் சொன்னாலே தமிழர்களை கைது செய்த பேரினவாத ஆட்சியாளர்கள் நாணித் தலை குனியும் வகையில் இராணுவ அதிகாரி ஒருவர், தலைவர் பிரபாகரனை மிகப் பெருந் தலைவனாக புகழ்ந்துரைத்துள்ளார் என்பது இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கதாகும்

Tags: Featured
Previous Post

விஷ ஊசி விவகாரம்! 26 போராளிகளிடம் முதற்கட்ட பரிசோதனை

Next Post

அண்ணா பிறந்த தினத்தில் அதிரடி – ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை!

Next Post

அண்ணா பிறந்த தினத்தில் அதிரடி - ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures