எட்டாவது நாளாகவும் தொடரும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி இன்று 8ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரதேச மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை அடைத்து கடந்த 3ம் திகதி முதல் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பின்னர் கடந்த 6ஆம் திகதி ஏனைய பொதுமக்களின் நன்மை கருதி பிரதேச செயலகத்தின் அலுவலக செயற்பாடுகள் நடைபெறுவதற்கு வழிவிட்டு தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் தமது காணிகள் மீட்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் புதுக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்
மேல் அதிகாரிகள் காணிகள் தொடர்பான நடவடிக்கையினை செயற்படுத்துகின்றோம் என்று சொல்வதை தவிர்த்து செயற்படுத்திவிட்டோம் எனும் பதில் தர வேண்டும்.
காணிகளில் தாம் கால்பதிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.