Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளமைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

April 20, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  அதன் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பிவைத்த அறிக்கையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாங்கள் அவசர சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தோம். ஆதார வைத்தியசாலை பருத்தித்துறையின் கிளை, தெல்லிபளை புற்றுநோய் வைத்தியசாலையின் கிளை, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் கிளை மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கிளை ஆகியவற்றின் கிளை சங்கங்களின் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கான இந்த முடிவானது வடக்கு மாகாணத்தின் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

16 தொற்று நோயாளர்கள், மதபோதகருடன் இருந்து கோரோனா தொற்றிக்குள்ளாகியதும் அவருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட 329 பேர்களில் 80க்கு மேற்பட்டோர் இன்னமும் பரிசோதனைக்கு உட்படாமலும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படாமலும் இருப்பதால், வடக்கு மாகாண சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் 27 இற்கு பிறகு மட்டுமே ஊரடங்கு உத்தரவை நீக்க பரிந்துரைத்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் பரிசோதனைகளை ஆகக் குறைந்தது இந்த நெருங்கிய தொடர்புகளுடன் செய்வதன் மூலம் யாழ்ப்பாணத்தின் சமூக தொற்று நிலை சம்பந்தமான வெளிப்பாடு மேம்படும்.

குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் பல்வேறு வியாதிகளுக்கு மருத்துவமனைகளுக்கு வருவார்கள். மேலும் கோவிட் -19 க்கான குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய எல்லா மருத்துவமனைகள் இன்னமும் தயார் நிலையில் இல்லை.

எனவே, நெருங்கிய தொடர்புகளின் பரிசோதனைகளை நிறைவு செய்வதற்கும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாட்களுக்கு நீட்டிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 33 ஆயிரம் பேர் கைது

Next Post

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு மட்டும் பஸ் சேவை

Next Post

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு மட்டும் பஸ் சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026
காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

July 12, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures