தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னதாக தனது மாகாணத்தில் உள்ள உள்ளூர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் பொருட்டு அல்பேர்ட்டா மாகாண அரசு, கனேடிய மத்திய அரசுடன் இணைந்து செயற்பட உள்ளது.
கனடாவில் இவ்வாறான ஒரு செயற்றிட்டம் அமுலாக்கப்படுவது இதுவே முதற்தடவை ஆகும். இத்திட்டம் அல்பேர்ட்டா மாகாணத்தில் 2வருடங்களுக்குப் பரீட்சார்த்த முறையில் செயற்படுத்தப்பட உள்ளது.
இவ்வகையான ஒரு திட்டத்தை நாடெங்கிலும் அமுல்படுத்தப்படக் கூடுமா என ஆராயும் பொருட்டு, அல்பேர்ட்டா மாகாணத்தினால் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தை மத்திய அரசு உன்னிப்பாக அவதானிக்க உள்ளதாக தொழில் வாய்ப்புக்கள் அமைச்சர் பற்றீசியா ஹஜ்டு அவர்கள் தெரிவித்தார்,