Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

October 24, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

உள்நாட்டு கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம் என்றும், உள்நாட்டு தொழில்முனைவோரை (Entrepreneurs) மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார்.

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற “2025 CNCI கைத்தொழில் மற்றும் சேவை மதிப்பீட்டு விருது விழாவில்” கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனத்தினால் (Ceylon National Chamber of Industries – CNCI) கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விருது விழாவின் நோக்கம், இலங்கையின் கைத்தொழில் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை இனங்கண்டு அவற்றை ஊக்குவிப்பதாகும்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“நாட்டின் கைத்தொழில் துறையை பலப்படுத்துவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், இறக்குமதிகளைக் குறைத்தல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு நேரடியான பங்களிப்பைச் செய்கின்றது.

கைத்தொழில் துறையின் கொள்ளளவு அபிவிருத்தி (Capacity Development), புத்தாக்கங்களை (Innovations) ஊக்குவித்தல், விரிவாக்கத்தை இலகுபடுத்துதல் மற்றும் புதிய சந்தைகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

பலமான போட்டித்தன்மை மிக்க கைத்தொழில் தளம் என்பது பொருளாதார ரீதியில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு முன்னுரிமை மட்டுமல்ல, அது ஒரு தேசியத் தேவையாகும்.

நிதி, தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் அபிவிருத்திக்கான வழிகளை விரிவுபடுத்தி கைத்தொழில் அபிவிருத்திக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.

கைத்தொழில் துறையில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குதலை நியாயமான பொருளாதார உத்தியாகவும் பயன்படுத்தப்படலாம்.

உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களின் வெற்றி மூலம் எமது தேசியப் பொருளாதாரத்தின் அத்திவாரம் வலுப்பெறுகிறது. உற்பத்தி, முகாமைத்துவம், புத்தாக்கம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய போதிலும், அவர்களின் பங்களிப்பு பெரும்பாலும் சரியாக இனங்காணப்படுவதில்லை. ஊழியர்கள், முகாமையாளர்கள் அல்லது தொழில்முயற்சியாளர்கள் என பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்கம் மூலம் ஒட்டுமொத்த கைத்தொழில் சூழலியல் அமைப்பையும் (Industrial Ecosystem) பலப்படுத்த உதவுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், கொள்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்கள் மூலம் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். துரிதக் கடன் வசதி மற்றும் நிதிச் சேவைகள், தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி, சமமான சேவைக்குச் சமமான ஊதியம் வழங்குதல், பெண்களை மையமாகக் கொண்ட தொழில்முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் தலையிடும்.

தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பைக் கட்டுப்படுத்தும் ஊதியம் வழங்கப்படாத பராமரிப்பு (Unpaid Care) போன்ற தடைகளை நீக்குவதற்கும், பரந்த மேம்பாட்டிற்காக பால்நிலைக்குப் பதிலளிக்கும் கைத்தொழில் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. தேசிய அபிவிருத்தியில் தொழில்முயற்சியாளர்களின் பங்கை நாம் பாராட்ட வேண்டும். அவர்களின் படைப்பாற்றலும்  உறுதிப்பாடும் பொருளாதார முன்னேற்றத்தின் அத்தியாவசிய காரணிகளாகும் என்றும் பிரதமர்  தெரிவித்தார்.

ஹேகாப் PLC (Hekab PLC) மற்றும் மாத்தறை ஃபிரீலன் என்டர்பிரைசஸ் (பிரைவேட்) லிமிடெட் (Matara Freelan Enterprises (Pvt) Ltd) ஆகிய நிறுவனங்களுக்கு இரண்டு பளிங்கு விருதுகளும் (Crystal Awards), குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு 10 விசேட விருதுகளும் பிரதமர் வழங்கிவைத்தார்.

இவ்விழாவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, CNCIஇன் தலைவர் பிரதீப் கஹவலகே உள்ளிட்ட விசேட அதிதிகள் கலந்துகொண்டனர்.

Previous Post

மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வில் அமளி துமளி

Next Post

ஜெனீவாவில் 151வது IPU மாநாடு – இலங்கைப் பாராளுமன்றக் குழு பங்கேற்பு 

Next Post
ஜெனீவாவில் 151வது IPU மாநாடு – இலங்கைப் பாராளுமன்றக் குழு பங்கேற்பு 

ஜெனீவாவில் 151வது IPU மாநாடு - இலங்கைப் பாராளுமன்றக் குழு பங்கேற்பு 

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures