Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் பி.வி.சிந்து

August 26, 2017
in Sports
0
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் பி.வி.சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டிகள் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையான சன் யுவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து முதல் செட்டை 21 – 14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

முதல் செட்டை இழந்ததால் சீன வீராங்கனையான சன் யு சோர்ந்து போனார். இதைப் பயன்படுத்திக்கொண்ட சிந்து, 2-வது செட்டில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தினார். அவரது வேகத்துக்கு முன்னால் சீன வீராங்கனையால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் 21-9 என்ற புள்ளிக்கணக்கில் 2-வது செட்டை சிந்து கைப்பற்றினார்.

இதன்மூலம் 21-14, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து, அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் பதக்கம் வெல்வது உறுதியாகி விட்டது.

மகளிர் பிரிவில் வெற்றி பெற்றாலும், ஆண்களுக்கான கால் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து ஆடினார். இதற்கு முன்னர் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் மற்றும் ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சன் வான் ஹோவை ஸ்ரீகாந்த் வீழ்த்தியிருந்ததால் இப்போட்டியிலும் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு நேர் மாறாக நேற்று ஸ்ரீகாந்துக்கு சன் வான் ஹோ, கடும் சவாலாக விளங்கினார்.

இப்போட்டியின் தொடக்கத்தில் ஸ்ரீகாந்த் சில தவறுகளைச் செய்ய முதல் செட்டின் ஆரம்பத்திலேயே சன் வான் 6-1 என்ற முன்னிலையைப் பெற்றார். ஆனால் விடாமல் போராடிய ஸ்ரீகாந்த், ஒரு கட்டத்தில் சன் வானுக்கு நெருக்குதல் கொடுத்து 8-8 என்று புள்ளிகளைச் சமன் செய்தார். ஆனால் அதன் பிறகு தன் சிறப்பான பிளேசிங்குகளால் ஸ்ரீகாந்தை திணறடித்த சன் வான், முதல் செட்டை 21- 14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

2-வது செட்டில் ஸ்ரீகாந்த் கடுமையாக போராடினாலும், அவரால் சன் வானை வீழ்த்த முடியவில்லை. இந்த செட்டையும் 21-18 என்ற புள்ளிக்கணக்கில் சன் வான் கைப்பற்றினார். இதன் மூலம் சன் வான் 21-14, 21-18 என்ற செட்கணக்கில் வென்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 49 நிமிடங்கள் நீடித்தது.

இப்போட்டி குறித்து நிருபர்களிடம் கூறிய சன் வான், “உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக நான் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுகிறேன். இதனால் இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

Previous Post

ரொனால்டோவுக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது: ஐரோப்பிய கால்பந்து சங்கம் வழங்கியது

Next Post

‘2.0’ உருவான விதம் வீடியோவுக்கு தமிழ் திரையுலகினர் பெரும் வரவேற்பு

Next Post
‘2.0’ உருவான விதம் வீடியோவுக்கு தமிழ் திரையுலகினர் பெரும் வரவேற்பு

'2.0' உருவான விதம் வீடியோவுக்கு தமிழ் திரையுலகினர் பெரும் வரவேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures