Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலக தொழிலாளர் தினம் இன்று

May 1, 2019
in News, Politics, World
0

சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்றாகும். மே தினம் எனப்படும் உலக தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மே தினத்தின் தொடக்கத்தை இரண்டு முக்கிய புரட்சிகள் அடையாளப்படுத்துகின்றது. 1776ல் அமெரிக்காவின் 13 மாநிலங்களில் வெடித்த தொழிலாளர் புரட்சி.

இப்புரட்சியினையடுத்து சிகாகோ தொழிலாளர் புரட்சி 1885 ல் ஆரம்பமாகி 1886 ல் மே தினமான முதலாம் திகதியில் முடிவுற்றுள்ளது.

எட்டு மணி நேரம் வேலை தொடர்பான போராட்டம் 1886 ல் சிகாகோவில் வெற்றியளித்ததோடு மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1886 ம் ஆண்டு மே முதலாம் திகதியில் 88,000 தொழிலாளர்களின் பங்கேற்புடன் “எட்டு மணித்தியாலம்” போராட்டம் ஆரம்பமானது. 307 நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் குதித்திருந்தனர்.

அடக்குமுறை அதிகரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. புரட்சி வெடித்து இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றிகண்டது. இதனை நினைவு கூறும் விதமாகவே சர்வதேச ரீதியில் வருடா வருடம் மே தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து, நாட்டில் எழுந்துள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அரசியல் அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும் மே தினக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் தவிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஷரீஆ பல்கலை எதற்கு?- அமைச்சர் ஹலீம் கேள்வி

Next Post

சவுதி தூதரகம் இலங்கையிலுள்ள சவுதியர்களுக்கு விசேட அறிவிப்பு

Next Post

சவுதி தூதரகம் இலங்கையிலுள்ள சவுதியர்களுக்கு விசேட அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures