Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும்

February 9, 2021
in News, Politics, World
0

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன என பிரதி பொது மக்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) இணையவழியூடாக நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்ட தடுப்பூசிகள் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில்கிடைக்கப் பெறும்.

அடுத்த கட்டம் எதிர்வரும் காலங்களில் கிடைக்கும். அத்தோடு அரசாங்கத்தினால் 18 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்படும்.

நாட்டில் தகுதியான 4000 தடுப்பூசி நிலையங்கள் இனங்காணப்பட்டுள்ளன. ஒரே சந்தர்ப்பத்தில் தடுப்பூசிகளை வழங்குவதற்காக 2000 நிலையங்களை தயார்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அதற்கமைய ஒரு நிலையத்தில் 300 என்ற வீதத்தில் நாளொன்றுக்கு 60 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்கக்கூடியதாகவிருக்கும்.

இந்தியாவிலிருந்து கிடைத்துள்ள தடுப்பூசிகள் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவு குறைவடைந்துள்ளது.

இதற்கான காரணம் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்த கட்டத்தினருக்கு வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

p2pபேரணிக்கு ஆதரவு: 2000 இற்கும் மேற்பட்ட கார்களில் கனடாவில் பேரணி!

Next Post

1000 ரூபா சம்பள உயர்வு – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமருக்கு நன்றி

Next Post

1000 ரூபா சம்பள உயர்வு – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமருக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures