உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு
சீனா தான் அமைத்த உலகின் மிகவும் உயரமான பெய்ப்பாங்ஜியாங் பாலத்தை இன்று வியாழக்கிழமை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துள்ளது.
தென்மேற்கு சீனாவை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த பாலமானது தரையிலிருந்து சுமார் 1850 அடி உயரத்திலும், 4400 அடி நீளத்தில் அமைந்துள்ளது. பாலத்தின் உயரமானது 200 மாடிகட்டிடத்தின் உயரத்திற்கு சமமானதாகும் என கூறப்பட்டுள்ளது.
குறித்த பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பாலத்தை அமைப்பதற்காக சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன என சீன ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
உலகில் மிகவும் உயரமான 10 பாலங்களில் 8 பாலங்கள் சீனாவில் அமைந்துள்ளன. குறித்த பாலங்கள் யாவும் பின்தங்கியப் பிரதேசங்களிலே அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.