உலகில் இப்படி ஒரு தலைவரா?? கனடா பிரதமர் செய்த மனதை உருக்கும் நெகிழ்ச்சியான பதிவு

உலகில் இப்படி ஒரு தலைவரா?? கனடா பிரதமர் செய்த மனதை உருக்கும் நெகிழ்ச்சியான பதிவு

கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ ஊனமான ஒருவருக்கு பொதுவெளியில் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ அகதிகள் விடயத்தில் உலகமக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

ஒருபுறம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாது என கறார் காட்டி வரும் நிலையில், ஜஸ்டின் அகதிகளை கனடாவுக்கு வரவேற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்றுகனடாவின் மாண்ட்ரீல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் escalator படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை.

வேறு நாட்டிலிருந்து வீல் சேரில் கனடா வந்த வந்த ஊனமுற்ற அகதி இதனால் சிரமப்பட்டார்.

இதை பார்த்த ஜஸ்டின் டுரூடோ அந்த மனிதர் உட்கார்ந்திருந்த வீல்சேரை ஒரு பக்கம் பிடித்து கொண்டார்.

இன்னொரு பக்கம் வேறொருவர் சேரை பிடித்து கொள்ள, படியிலிருந்து ஜஸ்டின் மெதுவாக அவரை இறக்கியுள்ளார்.

ஜஸ்டினின் இந்த மனிதநேயமிக்க செயலை பலரும் பாராட்டியுள்ளார்கள்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *