Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அழிவு சக்தியாக மாறும் இலங்கை – தமிழ் இனம் உலகை ஆளுமா? திகிலூட்டும் எதிர்வுகூறல் !!

November 13, 2016
in News
0
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அழிவு சக்தியாக மாறும் இலங்கை – தமிழ் இனம் உலகை ஆளுமா? திகிலூட்டும் எதிர்வுகூறல் !!

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அழிவு சக்தியாக மாறும் இலங்கை – தமிழ் இனம் உலகை ஆளுமா? திகிலூட்டும் எதிர்வுகூறல் !!

அடுத்தடுத்தாக நிகழ்ந்து வரும் சம்பவங்களுக்கு அமைய, விஞ்ஞான உலகில் ஒரு சில நம்ப முடியாத விடயங்களும் பூலோக வாசிகளை தொடர்ந்து கொண்டே வருகின்றது என்று கூற முடியும்.

நொஸ்ராடாமுஸ், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் ஓர் தீர்க்கதரிசியாக ஆய்வாளர்கள் கருதினாலும், அவர் கூறியவை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறி வருகின்றமையால் தற்கால உலகிற்கு முக்கியமான நபராக மாறிவிட்டார்.

ஹிட்லர் எழுச்சி, அமெரிக்க தாக்குதல் உள்ளிட்ட உலகின் முக்கிய சம்பவங்கள் அவரது கணிப்பின்படி நிறைவேற தற்போது அவர் மூன்றாம் உலக யுத்தம் தொடர்பில் கூறப்பட்டுள்ளவை வைரலாகி உள்ளது.

எதிர்காலத்தை முன் கூட்டியே கணிக்க இவருக்கு மட்டும் எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கே விடை கொடுக்க முடியாத சமயம், தமிழர் அல்லது ஈழம் பற்றி அவர் ஏதாவது கூறியுள்ளாரா? என்ற கேள்விக்கு பதில் தரும் வகையில் அவரின் கூற்றுக்களை சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.

நொஸ்ராடாமுஸ், தமிழர் இனம் பற்றி தனியாக குறிப்பிட்டு கூறவில்லை, ஆனாலும் மூன்றாம் உலகப்போரிற்கு ஒரு சிறிய நாடு வித்திடும் என்றும். வேறு ஒரு பகுதியில் அதற்கு அருகருகே இருக்கும் இரு சிறிய நாடுகளால் மூன்றாம் உலக யுத்தம் ஏற்படும் எனவும் அவர் கணித்து குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் இலங்கை உலக யுத்தத்திற்கு வித்திடவும் வல்லமை படைத்த நாடாகத்தான் திகழ்ந்து வருகின்றது என்பதனை சற்றே சிந்தித்தால் புரியும். அவர் மூன்றாம் உலக யுத்தத்திற்கு விடுத்துள்ள காலக்கெடு ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை.

இலங்கையில் ஆரம்பம் முதல் சீனா மற்றும் இந்திய நாடுகளின் தலையீடுகள் இருக்கின்றன. அதன் படி தற்போது ஒரு வேளை இலங்கை முற்றாக சீனாவின் பக்கம் சாய்ந்து விடுமாக இருந்தால் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்காவானது பொருளாதார ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும்.

இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டது போன்ற ஒரு யுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா எத்தனிக்கும். ஆனால், இங்கு தான் சற்று இடிக்கின்றது, அவ்வாறு ஒரு யுத்தம் ஏற்பட்டு இலங்கை அமெரிக்காவின் கையில் சிக்கிக் கொள்வதனை மட்டும் ஒரு போதும் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் உடன்படாது.

காரணம் இலங்கையை அமெரிக்கா கைப்பற்றி விட்டால், ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் என்பது ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு விடும் என்பது தான். வல்லரசு மற்றும் வல்லரசுக் கனவு நாடுகள் எப்போதும் அதனை ஒத்துக்கொள்ளாது.

இதன் படி நொஸ்ராடாலஸின் மூன்றாம் உலக யுத்தம் தொடர்பிலான கூற்று சிறு நாடு இலங்கையை குறிப்பதாக பல ஐரோப்பிய ஆய்வாளர்களும் கருதுகின்றதோடு நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

அதேபோல், நொஸ்ராடாமஸின் இன்னோர் கணிப்பில் அவர் கூறியுள்ளதாவது,

“உலகை ஆண்ட இனம் ஒன்று மீண்டும் உலகை ஆழ நினைக்கும், அதனால், உலக யுத்தம் மூழும் ஆனாலும் இனம் மீண்டும் ஆழும், அதற்கு அவர்களின் முன்னோர்கள் ஆவிகள் மனதளவில் தைரிய மூட்டும் தூண்டுதலாக இருக்கும்” என்ற பொருளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்கியங்கள் பெரும்பாலும் பிரித்தானியா நாட்டிற்கே பொருந்தும் என பல ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். என்றாலும், கடந்த சில காலங்களாக தமிழர் மத்தியில் உணர்வு பூர்வமான பல செயல்கள் இடம்பெறுவதை காணமுடிகிறது.

அதன் காரணமாக ஆய்வாளர்கள் தற்போது, தமிழில் அழிந்துபோயுள்ள அதே சமயம் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளார்கள். என்பது என்னமோ மறைக்க முடியாத உண்மைதான்.

இவற்றின் படி, நொஸ்ராடாமஸ் கணித்த அந்த குறிப்பிட்ட இனம், தமிழ் இனமாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழினம் என்பது ஏற்கனவே உலகை ஆண்டதற்கான ஆதாரங்கள் இக்காலகட்டத்தில் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பல நூறு ஆண்டுகளாக முடங்கி, அடங்கி போயிருந்த தமிழ் இனம் மீண்டும் உலக சக்தியாக மாறிவிடுமா என்பதை சுற்றிவரும் கடிகார முள் முடிவு செய்யும்.

Tags: Featured
Previous Post

16 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு தண்டனை

Next Post

2000 ரூபாய் நோட்டு கூட செல்லாமல் போகலாம்! மோடியின் அடுத்த அதிரடி!

Next Post

2000 ரூபாய் நோட்டு கூட செல்லாமல் போகலாம்! மோடியின் அடுத்த அதிரடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures