Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

உலகக் கோப்பை பார்க்க 5,000 மாணவர்களுக்கு இலவச அனுமதி..!

October 6, 2017
in Sports
0
உலகக் கோப்பை பார்க்க 5,000 மாணவர்களுக்கு இலவச அனுமதி..!

இந்தியாவில் நடக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டி, நம் நாட்டில் கால்பந்தைப் பிரபலப்படுத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு. கால்பந்து விளையாடும் சிறுவர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கும் இந்தப் போட்டி மாபெரும் நம்பிக்கை. இந்தப் போட்டியை, இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மேற்குவங்க அரசு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இலவசமாக உலகக்கோப்பை போட்டிகளைப் பார்க்க ஏற்பாடுகளை செய்துவருகிறது.

FIFA U-17 உலகக்கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டி உள்பட பத்து போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள `சால்ட் லேக்’ மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளைக் காண்பதற்கு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்க முடிவுசெய்துள்ளது மேற்குவங்க அரசு. இந்த மாநில கல்வித் துறையின் உயர் அதிகாரி ஒருவர், “ஒவ்வொரு போட்டியையும் காண, ஏறத்தாழ 5,000 மாணவர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பத்து போட்டிகளில் அக்டோபர் 28-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியும் அடங்கும். அதற்கான அனுமதிச் சீட்டுகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் எனக் கலந்து, இங்கு நடக்கும் பத்து போட்டிகளுக்கும் தலா 5,000 ரூபாய் வழங்கப்படும்.

எனினும், கால்பந்து மற்றும் மற்ற போட்டிகளில் விளையாடும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மொத்தம் உள்ள 5,000 அனுமதிச் சீட்டுகளில், 2,000 பள்ளி மாணவர்களுக்கும், 2,000 கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்படும். பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் மெட்ராசேஸ் மாணவர்களுக்கு தலா 500 வழங்கப்படும்.

சால்ட் லேக் மைதானத்தில் இந்த மாணவர்கள் அமர்வதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளைக் காண விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலை முன்கூட்டியே கொடுக்குமாறு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேற்குவங்க விளையாட்டு ஆணையம் இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதோடு, விளையாட்டில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களைக்கொண்டு இறுதிப் பட்டியலை தயாரிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள மாணவர்களே, போட்டிகளைக் காண்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

மாணவர்களை பள்ளியிலிருந்து சால்ட் லேக் மைதானத்துக்கு அழைத்துச் சென்று வர, 70 பேருந்துகள் அனுப்புமாறு போக்குவரத்துத் துறையிடம் கேட்டுள்ளோம். மைதானத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் மாணவர்கள் இங்கே வந்து போட்டிகளைக் காண்பது மிகவும் கடினம். எனவேதான் அவர்கள் பாதுகாப்பாக இங்கே வந்து செல்லுவதற்கும், உணவு மற்றும் தங்குமிடம் போன்றவை இலவசமாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

“மிகப்பெரிய ஒரு விளையாட்டுத் திருவிழா நம் ஊரில் நடக்கும்போது, வெளிநாட்டு வீரர்கள் விளையாடும் விதத்தையும், உயர் தரமான விளையாட்டு நடைபெறும் விதத்தையும் மாணவர்களுக்குக் காண்பிக்கவேண்டியது நம் கடமை. இதுபோன்ற விளையாட்டுகளை மிக அருகில் பார்க்கும்போது சிறந்த கால்பந்தாட்ட வீரராகும் கனவுகள் அதிகரிக்கும். இது அவர்களுக்கு ஒரு சிறந்த உத்வேகத்தை தரும்” என்றும் அவர் கூறினார்.

கால்பந்து உலகின் மிகப்பெரிய போட்டித்தொடர் நம் நாட்டில் நடக்கும்போது, அதை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், அதை எல்லா வழிகளிலும் வெற்றி பெறவைக்க வேண்டுமென்று நினைத்திருக்கும் மேற்குவங்க அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கால்பந்து விளையாடும் பல்லாயிரம் சிறுவர் சிறுமியருக்கும் இந்தத் தொடர் சென்றடைவதே இதன் உண்மையான வெற்றி. அந்த வெற்றியை அடைய, மேற்குவங்கத்தை மற்ற மாநிலங்களிலும் பின்பற்றலாம்!

Previous Post

மீண்டும் மெஸ்ஸி மற்றும் சகாக்கள் சொதப்பல்: உ.கோப்பைக்கு அர்ஜெண்டினா சந்தேகம்

Next Post

பாக். தொடரில் மலிங்கா நீக்கம்

Next Post
பாக். தொடரில் மலிங்கா நீக்கம்

பாக். தொடரில் மலிங்கா நீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026

Recent News

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures