உறைய வைக்கும் தூறல் ரொறொன்ரோ பெரும்பாகத்தில் பல வாகன மோதல்களை ஏற்படுத்தியது.
கனடா- ரொறொன்ரோவில் பனிக்கட்டிகள் நிறைந்த ரொறொன்ரோ பகுதி நெடுஞ்சாலைகளில் குறைந்தது 20பேர்கள் வரை கடந்த இரவு பல-வாகன மோதல்களினால் காயமடைந்துள்ளனர்.
இரவு 8மணியளவில் ரொறொன்ரோ வடமேற்கு பகுதியில் பல வாகனங்கள் எக்லிங்டனிற்கு அருகில் நெடுஞ்சாலை 427ல் மோதியுள்ளன.இதனால் ஐந்து பேர்கள் காயமடைந்தனர்.
ஒரு மணித்தியாலங்களின் பின்னர் மிசிசாகாவில் நெடுஞ்சாலை 410 மற்றும் டெரி வீதியில் டசின் கணக்கான வாகனங்கள் மோதியதில் 15 பேர்கள் வரை சாதாரண காயங்களிற்கு ஆளானார்கள்.
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் லேசான பனி மற்றும் உறைய வைக்கும் திட்டு தூறல் காணப் படுவதால் அபாயகரமான வாகனம் செலுத்தும் நிலைமைகள் ஏற்படலாம் என கனடா சுற்று சூழல் காலநிலை ஆய்வு எச்சரித்துள்ளது.