Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிரிழந்தவர்களை நினைவுகூர தடைபோடாதீர்கள்- கட்சிகள் மாநாட்டில் கோரிக்கை!

September 19, 2020
in News, Politics, World
0

தமிழ் மக்களின் உரிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும் உரிமையுமாகும் என தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறு நினைவுகூருவதை தடை விதிப்பதானது தமிழர்களின் உாிமைகளை மறுதலிப்பதாகும் என்பதைால் அரசாங்கம் இந்தத் தடைகளை அடுத்த சில நாட்களில் அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவு கூரலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளை கண்டிப்பதற்காக இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஜனநாயாகப் போராளிகள் கட்சி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன.

இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில், “தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களை அஞ்சலிப்பதும் நினைவுகூருவதும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உரிமையும் கடமையுமாகும்.

அதற்கு எதிராக தடைபோடுவது தமிழர்களின் உரிமையை மறுதலிப்பதாகவே அமையும். எனவே, அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் நிராகரிக்கிறது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் இவ்வாறான தடை உத்தரவுகளை நீக்கவேண்டும்.

திலீபனுக்கு மட்டுமல்லாமல், போராளிகளையும் பொதுமக்களையும் நினைவுகூருவது எங்கள் கடமையும் உரிமையுமாகும். அதனை பயங்கரவாதம் எனக்கூறி தடைசெய்வது ஏற்புடையதல்ல.

இன்றைய கூட்டத்தில் சில தீர்மானங்களை எட்டியிருக்கின்றோம். பிரதானமாக தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக நினைவுகூரல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் நீக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் கைவைக்ககூடாது என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு நாளை கடிதம் எழுதவுள்ளோம். அதற்கு எமக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கம் இதனை செய்யுமா, செய்யாதா என்பதற்கு அப்பால் எமக்குப் பொருத்தமான பதில் வழங்கப்படவேண்டும். பதில் வழங்காவிட்டால் அல்லது இவ்விடயத்தில் பொறுப்பான பதில் வழங்கப்படாவிட்டால் தமிழர் தாயகத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அந்த வழிக்குள் எங்களை அரசே தள்ளுகின்றது.

அதனை நாங்கள் துாதுவராலயங்களுக்கும் மனித உாிமை செயற்பாட்டாளர்களுக்கும் சொல்லுவோம்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளாமை தொடர்பாகக் கேட்டபோது அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதுடன் இக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

Previous Post

ஐ .நாவில் இருந்து இலங்கை விலகவில்லை : அரசாங்கம்

Next Post

செங்கலடியில் பலரை மோதிச் சென்ற கார்- ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

Next Post

செங்கலடியில் பலரை மோதிச் சென்ற கார்- ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures