Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயரிய செயலால் பாராட்டை அள்ளும் மதுசன்

December 16, 2021
in News, Sri Lanka News
0
உயரிய செயலால் பாராட்டை அள்ளும் மதுசன்
யாழ்ப்பாணம் – தென்மராட்சி வரணியைச் சேர்ந்த சியானீஸ் மதுசன் என்ற 21 வயது இளைஞனின் உயரிய செயற்பாட்டால் இன்றைய தினம் வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
கடந்த 9ஆம் திகதி  சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த தாலி கொடி உள்ளிட்ட  தங்க ஆபரணங்கள்  அடங்கிய கைப்பையை யாழ்.அரியாலை பஸ் தரிப்பிடத்தில் வைத்துவிட்டு உரிமையாளர் பஸ் வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறும்போது,  அதனை விட்டுவிட்டு பஸ் ஏறியுள்ளார்.
அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சியானீஸ் மதுசன் என்ற இளைஞனின்  கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது. எடுத்துத் திறந்து பார்த்துள்ளார். உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளைக் கண்டதும்,வெலவெலத்துப் போனவர் அக்கைப்பையை மேலும் ஆராய்ந்து அதனுள் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு , கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார்.
அடுத்தவர் பொருளை அடித்துப் பறிக்கும்  இன்றைய உலகில்…  பேருந்தில் இருந்தோர் “பவுண் விற்கிற விலையில எடுத்தவன் தருவானா?” என்று கூறிய கூற்றுக்கெல்லாம் மறுதலையாய், செயற்பட்ட சியானீஸ் மதுசன் அவர்களை நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் குறித்த இளைஞனுக்கு பொன்னாடை போர்த்தி அவரை பாராட்டி வாழ்த்துமடல் ஒன்றையும் வழங்கி கெளரவித்தார்.
அத்துடன் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சி.பிரபாகரன் அவர்கள் குறித்த இளைஞனுக்கு சந்தன மாலை அணிவித்து கெளரவித்தார்.அத்தோடு குலானந்த குளத்து முருகமூர்த்தி ஆலய  நிர்வாக சபைத்தலைவர் குணரத்தினம் அவர்களும் இளைஞனுக்கும் அவரது தாயாருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
குறித்த நிகழ்வில்  ஆலய குரு, வரணிப் பகுதி பாடாசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் ,நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு இளைஞனை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஈழத்து அங்கத எழுத்தாளர் சண்முகநாதன் காலமானார்

Next Post

வெளிநாட்டினரின் விசா ரத்து | அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு

Next Post
இரட்டை குடியுரிமை: பதவி இழக்கும் 9-ஆவது ஆஸ்திரேலிய எம்.பி.

வெளிநாட்டினரின் விசா ரத்து | அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures