Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் இலங்கை தேவை – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ரணில்

February 4, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

முன்னேற்றமடைந்த சமூக, பொருளாதார, அரசியல் வெளியில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் இலங்கையொன்று உருவாக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கான வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.

கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு நமது முதன்மை நோக்கமாகும்.

அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம். 

பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கை நாட்டினது பிரஜைகளின் கடந்த கால பலத்தை மீண்டும் மீட்டெடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, போட்டி நிறைந்த உலகப் பொருளாதாரத்தின் புதிய இலக்குகளை நோக்கி நாம் துரிதமாக நகர வேண்டும்.

2023இல் 75ஆவது சுதந்திர தின விழாவுடன் ஆரம்பமாகும் இப்புதிய மறுசீரமைப்புப் பயணத்தை 2048ஆம் ஆண்டு 100ஆவது சுதந்திர தின விழா வரை, மாறாத அரச கொள்கையை நிலைநிறுத்துவதே எமது அரசாங்கத்தின்  பிரதான நோக்கமாகும். 

நூற்றாண்டு சுதந்திர தினத்தின்போது நாட்டு மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட, உயர் பொருளாதார  எழுச்சியை கொண்ட, உலகளாவிய மூலதனத்தின் மையமாக விளங்கும் புதிய இலங்கையை உருவாக்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். அதற்காக, இன்றே எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுப்பேன் என உறுதியளிக்கிறேன். அதற்கு உங்கள் நம்பிக்கையையும் ஆசிகளையும் நான் எதிர்பார்க்கிறேன்.

அணிசேரா என்றபோதும் தீர்க்கமான, பலமுள்ள, பின்வாங்காத, காலநிலை மாற்றத்துக்கு தீர்வு காண்பது போன்ற நிலையான இலட்சியங்களுடன் கூடிய புதிய வெளியுறவுக் கொள்கையை தற்போது செயல்படுத்தி வருகின்றோம். 

உலகின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக்கூடிய இலங்கையர் என்ற வகையில் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

உலகம் முழுவதும் வாழும் இலங்கை மக்கள் எமது நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கிவரும் பங்களிப்பை நான் நன்றியுடன் நினைவுகூருகின்றேன். 

நமது இளைஞர் சமூகம் புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதற்கான திட்டங்களை கொண்டிருந்தாலும், மூலதன பற்றாக்குறை பிரச்சினையாக உள்ளது. 

எமது இளம் சந்ததியின் அத்தகைய திட்டங்களில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முதலீடு செய்யும் திறன் உள்ளது. 

எனவே, இந்த நாட்டில் உள்ள இளைஞர் சமூகமும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் புதிய வர்த்தகத் திட்டங்கள்  மூலம் இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப பாடுபடுவார்கள் என நான் நம்புகின்றேன்.

பொருளாதார ரீதியில் மிகவும் சவாலான இக்காலகட்டத்தில் அதிக பொறுமையுடனும் உறுதியுடனும் செயற்படுவதன் மூலம் இப்புதிய சமூக சீர்திருத்த திட்டத்துக்கு பங்களிக்குமாறு அனைத்து இலங்கையர்களிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

முன்னேற்றமடைந்த சமூக, பொருளாதார, அரசியல் வெளியில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் இலங்கையொன்று உருவாக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் – சி.வி.விக்னேஸ்வரன்

Next Post

சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் | முல்லைத்தீவில் எதிர்ப்பு போராட்டம்

Next Post
சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் | முல்லைத்தீவில் எதிர்ப்பு போராட்டம்

சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் | முல்லைத்தீவில் எதிர்ப்பு போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures