உணவிற்கு பணம் செலுத்தாத 24வருடங்கள் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு நடந்த சோகம்!
பிரிட்டிஷ் கொலம்பியா-Burger King ல் 24வருடங்களாக பணிபுரிந்த பெண் ஓருவர் மீன் சான்விட்ச் கொம்போ ஒன்றை பணம் செலுத்தாமல் வீட்டிற்கு எடுத்துசென்றார் என்பதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
இச்செய்கை ஒரு தவறான நீக்கம் என நீதிபதி கண்டறிந்ததால் இவருக்கு 46,000டொலர்கள் வெகுமதி அளிக்கவேண்டும் என தீர்ப்பளித்தார்.
2013ல் வன்கூவரில் சமையல் பணியாளராக வேலை செய்த உஷா ராம் என்பவர் விரைவு உணவு உரிம குழுமத்தை கோட்டிற்கு அழைத்துள்ளார். கடமையில் இருந்த மனேஜர் பணம் செலுத்தாமல் உணவை வீட்டிற்கு எடுத்து செல்லலாம் என அனுமதி கொடுத்திருந்தார் என ராம் வாதாடியுள்ளார்.
வன்கூவர்-கிரான்வில் வீதி விரைவு-உணவு இணை உரிமையாளர் நீதி மன்றத்தில் தனக்கு தானே ஆஜராகி ராம் சான்விச், விறைஸ் மற்றும் குடிபானம் போன்றனவற்றை யாயாபா சல்மன் என்ற மனேஜர் கடமையில் இருந்த சமயம் எடுத்து சென்றதை தன்னால் ஏற்று கொள்ள முடியாதென தெரிவித்துள்ளார்.
55-வயதுடைய ராம் 1987ல் விஜியிலிருந்து கனடா வந்தவர்.8-ம் தரம் வரையிலான கல்வி அறிவு கொண்டவர். அடிப்படை ஆங்கில அறிவுடையவர். மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியளித்துள்ளார். ஊனமுற்ற கணவன் மனநிலை பாதிக்கப்பட்ட மகள் இவரது குடும்பம்.
1989ல் மொஹமட் என்பவரின் கீழ் பேர்கர் கிங்கில் பணிபுரிய ஆரம்பித்தவர். பேர்கர் கிங்கின் பல கிளைகளில் பணிபுரிந்துள்ளார்.
2008லிருந்து குறிப்பிட்ட கிளையில் வேலை செய்து வந்துள்ளார். இடைநிறுத்தப்பட்ட போது முழு நேர பணியாளாக குறைந்த பட்ச ஊதியத்திற்கு பணிபுரிந்து வந்துள்ளார்.
வேலை ஆரம்பித்த நாளிலிருந்து இடைநிறுத்தப்படும் வரை பணிபுரிந்த இவரின் வருடாந்த சம்பளம் 21,000டொலர்கள் மட்டுமே.
சிறந்த திறமையான எந்தவித நடத்தை குறித்த அறிக்கை எதுவுமின்றி கடமை புரிந்தவரென மொஹமட் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
இறுதியாக 2013ல் இவரை பணிநீக்கம் செய்யு முன்னர் வேலை முடிந்து வீடு செல்லும் போது கடமையில் இருந்த மனேஜர் சல்மனிடம் மீன் சான்விச்சை வீட்டிற்கு எடுத்து செல்லலாமா என கேட்டதாகவும் அதே சமயம் தன்னிடம் அப்போது பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.அவரும் உடன்பட்டுள்ளார்.
மனேஜர் உடன்பட்டால் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது அரை-விலையில் பணி முடிந்து செல்கையில் எடுத்து செல்ல முடியும்.குடி பானம் இலவசம்.
ஊழியர் கொள்கைகளை புரிந்து கொள்வதில் வித்தியாசமான விளக்கங்கள் கொண்ட சாட்சியங்கள் பகிரப்பட்டதை நீதிபதி கவனித்துள்ளார்.
பணம் செலுத்த தவறியதால் சல்மன் ராம் திருடி என கூறியதுடன் வேலையை விட்டு வெளியேறுமாறும் தெரிவித்துள்ளார்.இதனால் ராம் மனஉழைச்சலிற்கு ஆளானார்.
இவற்றை எல்லாம் கேட்டறிந்த பிரிட்டிஷ் கொலம்பிய உச்ச நீதிமன்ற நீதிபதி ராமிற்கு சரியான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை எனவும் தவறான தகவல் பரிமாற்றம் அனைத்திற்கும் காரணம் எனவும் தெரிவித்தார்.
சகலவற்றையும் கருத்தில் கொண்டு ராமிற்கு பொது இழப்பீடாக 21,000டொலர்கள்-ஓருவருட சம்பளம் மற்றும் 25,000டொலர்கள்-பதவி நீக்கம் செய்யப்பட்டதால் உணர்வு ரீதியான கொந்தளிப்பிற்கு ஆளானதால் மோசமான பாதிப்படைந்திருப்பதால் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.