உடலை முழுமையாக மறைக்கும் நீச்சல் உடைக்கு கேன்ஸ் நகரில் தடை

உடலை முழுமையாக மறைக்கும் நீச்சல் உடைக்கு கேன்ஸ் நகரில் தடை

பிரான்சின் கேன்ஸ் நகரில் முஸ்லிம் பெண்கள் அணியும் முழுமையாக உடலை மறைக்கும் நீச்சல் உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் நகரின் மேயர் டேவிட் லிஸ்னர்ட் வெளியிட்டுள்ள உத்தரவில், கடற்கரைக்கு செல்பவர்கள், நல்லொழுக்க நெறிமுறைகள் மற்றும் மதச்சார்பின்மையை மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனினும் ஒழுக்கமான முறையில் உடலை மறைக்கும் விதத்திலேயே குறித்த உடையை அணிவதாக முஸ்லிம்களின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் நீச்சல் உடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம். எனவே, இத்தடையை மீறி குறித்த ஆடையை அணிபவர்கள் 40 டொலர்கள் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்றும் கேன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் அங்குள்ள மதம் சார்ந்த தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *