உக்ரைனில் திடீரென பூமி வெடித்த சிதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் பூமிக்கடியில் போடப்பட்டிருந்த ராட்சத குடிநீர் குழாய் திடீரென வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது.
குறித்த ராட்சத குடிநீர் குழாய் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் உயர் அழுத்தத்தால் அது வெடித்து சிதிறியுள்ளது. அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவில், நபர் ஒருவர் நடந்து செல்கிறார், அவர் சென்ற பிறகு திடீரென பூமிக்கு அடியில் இருந்த குழாய் வெடித்து சிதற தார் சாலை பிளந்து நீர் மற்றும் மண் பயங்கரமாக வெளியேறுகிறது.
இதில் அப்பகுதிக்கு அருகே இருந்த வீடுகளும், கார்களும் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இதில் ஒருவருக்கு கூட பாதிக்கப்படவில்லை. சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.