முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
மேன்முறையீட்டு மனு
குறித்த மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, கோட்டாபய ராசபக்ச உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் காவல்துறைமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.









