சிரியாவில் அரச தரப்பு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன குண்டு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சிரிய ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தீவிரவாத குழுக்கள் அந்நாட்டின் பல பகுதிகளையும், தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளும் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இதன் காரணமாக தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து சிரியா இராணுவம் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தீவிரவாதிகளை இலக்கு வைத்து சிரியா படையினர் மேற்கொண்ட இரசாயன குண்டு தாக்குதலில் 68 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400 பேர் வரையிர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதன் காரணமாக உயிரிழந்வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும, தாக்குதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட இரசாயம் எந்த வகையினை சேர்ந்தது என இது வரையிலும், கண்டறியப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எனினும், குளோரின் விஷ வாயு அடைக்கப்பட்ட குண்டுகள் ஹெலிகொப்டர் மூலம் சிரிய இராணுவம் வீசியதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின் மூலம் தெரியவந்தது.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகள் மற்றும் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை கடந்த காலங்களில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. குறிப்பாக பொது மக்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் மீது இரசாயன குண்டுகள் மற்றும் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டன.
இதன் காரணமாக பல ஆயிரம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.