Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈராக்கை வீழ்த்தி 3 ஆம் குழுவுக்கு முன்னேறியது இலங்கை

August 14, 2022
in News, Sports
0
ஈராக்கை வீழ்த்தி 3 ஆம் குழுவுக்கு முன்னேறியது இலங்கை

இலங்கை டென்னிஸ் சங்க களிமண் தரை டென்னிஸ் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கடல்சூழ் (ஆசிய/ஓஷானியா) பிராந்தியத்துக்கான டேவிஸ் கிண்ண 4ஆம் குழு இறுதிப் போட்டியில் ஈராக்கை வீழ்த்திய இலங்கை 3ஆம் குழுவுக்கு தரம் உயர்த்தப்பட்டது.

தத்தமது குழுக்களில் தோல்வி அடையாத அணிகளாக இலங்கையும் ஈராக்கும் மோதிக்கொண்ட இறுதிப் போட்டியில் 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்று தரமுயர்வைப் பெற்றது.

இரண்டு ஒற்றையர் ஆட்டங்கள், ஓர் இரட்டையர் ஆட்டம் என 3 ஆட்டங்கள் கொண்ட இறுதிப் போட்டியில் முதலிரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் இலங்கை வெற்றிபெற்றதால் இரட்டையர் ஆட்டத்துக்கு அவசியம் ஏற்படவில்லை.

முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஈராக் வீரர் அப்துல்லா அலியை 6 – 4, 6 – 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இலங்கை வீரர் யசித்த டி சில்வா வெற்றிகொண்டார்.

தொடர்ந்து   நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஈராக் வீரர் ஆதில் முஸ்தபாவை 6 – 3, 6 – 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இலங்கையின் மூத்த, அனுபவசாலியான ஹர்ஷன கொடமான்ன இலகுவாக வெற்றிகொண்டு 3ஆம் குழுவுக்கு இலங்கை தரமுயர்வதை உறுதி செய்தார்.

இறுதிப் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற ஏ குழுவுக்கான லீக் சுற்றில் கஸக்ஸ்தானையும் பங்களாதேஷையும் 3 நேர் செட்களில் இலங்கை வெற்றிகொண்டிருந்தது. இப் போட்டியில் இலங்கை ஒரு செட்டிலும் தொல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெற்றிபெற்ற இலங்கை அணியில் ஹர்ஷன கொடமான்ன, யசித்த டி சில்வா, சத்துரிய நிலவீர, தெஹான் சஞ்சய விஜேமான்ன, அஷேன் மினோஜ் ஜூலான் சில்வா ஆகியோரும் விளையாடாத அணித் தலைவர் உதித் விக்ரமசிங்கவும் இடம்பெற்றனர்.

இலங்கை அணிக்கு ரெனூக் விஜேமான்ன பயிற்சி அளித்ததுடன் கொமடோர் ப்ரதீப் கருணாதிலக்க  அணி முகாமையாளராக   செயற்பட்டார்.

இதேவேளை கடந்த 20 வருடங்களாக இலங்கை டென்னிஸ் அணியில் இடம்பெற்று பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த மூத்த வீரர் ஹர்ஷன கொடமான்ன (37 வயது) டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

Previous Post

ஒரு தொலைபேசி எண்ணில் பல வாகனங்களை பதிவு செய்துகொள்ள புதிய வசதி – எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர

Next Post

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்துக – வைகோ வலியுறுத்தல்

Next Post
இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது | வைகோ

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்துக - வைகோ வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures