பாரிஸில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஈபிள் கோபுர ஊழியர்கள் கடந்த 1ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்காரணமாக ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்து.
இந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை பார்வையிடுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஈபிள் கோபுர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
