செனகல் தேசத்தில் டாக்கர் நகரில் நடைபெற்றுவரும் 4ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தவர் என்ற வரலாற்று சாதனையை மத்தியதூர ஓட்ட வீரர் லஹிரு அச்சின்த படைத்தார்.
டாக்கர், இபா மார் டியொப் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்து தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துக்கொடுத்தார்.
அப் போட்டியை 3 நிமிடங்கள், 59.08 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை லஹிரு அச்சின்த வென்றெடுத்தார்.
அப் போட்டியில் எதியோப்பிய வீரர் வொபி செப்லெகா (3:58.73 தங்கப் பதக்கத்தையும் ஸ்பெய்ன் வீரர் அலெக்ஸ் சங்கில் (3:58.70) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.












