இலங்கை இராணுவத்தில் உருவாகும் மற்றுமொரு புதிய படைப்பிரிவு..
இலங்கை இராணுவத்தில் புதியப்படை பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாளும் வகையில் இந்த புதியப்படை பிரிவு உருவாக்கப்படுகின்றது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவினால் உருவாக்கப்படும் இந்தப் புதிய படைப் பிரிவு பேரழிவு இரசாயன அவசரநிலைகளை சமாளிக்கும் வகையில் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக லெப்.கேணல் ரி.டி.பி.சிறிவர்த்தன செயற்படும் அதேவேளை, பிரதி கட்டளை அதிகாரியாக மேஜர் ஏ.யு.ஹிடெல்லாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் 14வது பற்றாலியனின் ஒரு பகுதியாக இந்த ஸ்குவாட்ரன் உருவாக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பித்தக்கது.