இலங்கை இராணுவத்திற்கு விஷேட பயிற்சிகளை வழங்கிய அமெரிக்க இராணுவம்..!
இலங்கை இராணுவத்தினருக்கு அமெரிக்க இராணுவத்தினர் விஷேட பயிற்சிகளை வழங்கியுள்ளனர். நல்லெண்ண விஜயமாக அமெரிக்க கடற்படையின் “ஹோப்பர்” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
நான்கு நாள் விஜயமாக வருகைத் தந்துள்ள குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளனர். குறித்த கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இரு நாட்டு கடற்படையினருக்கும் மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர்.
இதன் ஒரு அங்கமாகவே, இலங்கை இராணுவத்தினருக்கு அமெரிக்க இராணுவத்தினர் விஷேட பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.