Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி விருப்பம்

January 17, 2019
in News, Politics, World
0

எதிர்காலத்தில் இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள தமது நாடு எதிர்பார்ப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸுக்கான அரச முறை விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளில் வரலாற்று முக்கியத்துவமுடைய சந்தர்ப்பமாகும் எனக் குறிப்பிட்ட பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte), அந்த நம்பிக்கையான நட்புறவுடன் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸுக்கான நான்கு நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்டுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்றையதினம் (16) பிற்பகல் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் இதனை தெரிவித்தார்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளுக்கும் காணப்படும் சவால்கள் பொதுவானதாகும் எனத் தெரிவித்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினையாக காணப்படும் போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் போன்ற சவால்களிலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிலிப்பைன்ஸ் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

தமக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு நாடுகளினதும் நன்மைக்கான கருத்துப் பாரிமாறல்கள் இடம்பெற்றமை சிறப்பானதாகும் எனவும் இதன்போது கைச்சாத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் ஊடாக எதிர்காலத்தில் இரு நாடுகளும் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்தி புதியதோர் பாதையில் பயணிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

தனது இந்த விஜயத்தின் ஊடாக இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நீண்டகால நம்பிக்கையான நட்புறவொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையே கட்டியெழுப்பப்பட்ட அந்த புதிய நட்புறவினூடாக இரு நாட்டு மக்களினதும் சௌபாக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்காக இணைந்து பயணிக்க முடியும் என தெரிவித்தார்.

வெகு விரைவில் இலங்கைக்கு வருகை தருமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இந்த விஜயத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான சிறந்ததோர் சந்தர்ப்பமாக அது அமையும் என தெரிவித்தார்.

Previous Post

போலி ஆயுர்வேத வைத்தியர் கைது

Next Post

தேரர்களையும் ஆள்விட்டு எச்சரிக்க ஆரம்பித்துள்ள அரசாங்கம்

Next Post

தேரர்களையும் ஆள்விட்டு எச்சரிக்க ஆரம்பித்துள்ள அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026

Recent News

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures