இலங்கையில் ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இல்லை என அரசாங்க புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க பாதுகாப்பு பிரதிநிதி மேஜர் ஜெனரல் ப்ரயன் பென்டன், இலங்கை ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியுள்ளாக வெளியிட்ட கருத்த தொடர்பில் புலனாய்வு பிரிவு பிரதானி ஒருவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், மாலைத்தீவு, பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், ஆகிய நாடுகளின் எல்லைகளில் இந்த பிரச்சினை உள்ள போதிலும், இலங்கையில் அவ்வாறான அச்சுறுத்தல் இல்லை. வெளிநாட்டு புலனாய்வு பிரிவினால் அவ்வாறான ஒரு தகவல் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலைத்தீவில் கிட்டத்தட்ட 400 ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளார்கள என வெளிநாட்டு புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மாலைத்தீவு நாட்டவர்கள் இந்த நாட்டிற்குள் நுழையும் போது விசா பெற்றுக் கொள்ளாமையினால் அந்த நாட்டவர்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருகைத்தருகின்றனர். அதற்கமைய தீவிரவாதிகள் இந்த நாட்டிற்கு நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளமையே இந்த சிக்கல் ஏற்பட காரணம் என அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
