Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிர் பிழைத்தாரா? ஜனாதிபதியின் இரகசியத்தின் உள்நோக்கம்!

August 21, 2016
in News, Tech
0
இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிர் பிழைத்தாரா? ஜனாதிபதியின் இரகசியத்தின் உள்நோக்கம்!

இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிர் பிழைத்தாரா? ஜனாதிபதியின் இரகசியத்தின் உள்நோக்கம்!

கடந்த கால ஆட்சியில் இடம் பெற்ற திருட்டுகளையும் ஊழல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததைப்போல் பாதுகாக்கப்பட்ட இரசியங்களை வெளியிடுட்டு எதிர்ப்பவர்களை வீதியில் அலைய விடுவேன் எனஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பகிரங்கமாக கூறிய கருத்தே தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

இங்கு ஜனாதிபதி என்ன இரகசியத்தை வெளியிடப்போகின்றார் என்பது அனைவராலும் எதிர்ப்பார்க்கபடும் விடயமாக மாறிவிட்டது. இவரின் இந்த கருத்து மிகப்பெரிய சந்தேகத்தினையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி விட்டதாக அவதானிகள் கருத்து வெளியிடுகின்றனர்.

முக்கியமாக ஜனாதிபதி இதனை தெரிவிக்கும் போது…

“கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் எமது ஆட்சியை குலைக்க புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கப் போகின்றார்களாம் அவ்வாறு அவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்தால் அவர்களால் இத்தனை காலமும் பாதுகாத்து வந்த இரகசியத்தை வெளியிட்டு அவர்களை மீண்டும் எப்போதும் ஆட்சி செய்ய விடாமல் வீதியில் அலைய விடுவேன்” என்றே ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக மிகப்பெரியதோர் ஆயுதத்தை தற்போதைய அரசு கையில் வைத்துள்ளது என்பது தெளிவாக புலப்படுவதாக சந்தேகங்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதியின் கூற்றின் படி தற்போதைய ஆட்சியாளர்களினாலும் மஹிந்த கால ஆட்சியின் போதும் இடம் பெற்ற முக்கியதோர் விடயம் இரகசியமாக காப்பாற்றப்பட்டு வருகின்றது. அதனை மஹிந்த தரப்பில் தற்போதைய ஆட்சிக்கு இடையூறு ஏற்படும் போது மட்டுமே வெளிப்படுத்தப்படும்.

அவ்வாறு புதிய கட்சி ஆரம்பிக்கப்படா விட்டால் இரகசியம் இரகசியமாகவே காணப்படும். என்பதனையும் ஜனாதிபதி சூசகமாக கூறியுள்ளார்.

தற்போதைய ஆட்சிக்கு பங்கம் விளைவிப்பவர்களாக கருதப்படுவது மஹிந்த மட்டுமே, நல்லாட்சி ஆட்சிக்கு வந்தது முதலாக மஹிந்தவை மீள் எழ விடாமல் தொடர்ந்தும் கால இடைவெளிகளில் அவருடைய சுற்றத்தார் குடும்பத்தாரை தற்போதைய அரசு குறிவைத்தே காய்களை நகர்த்தி வருகின்றதன் மூலம் அது தெளிவு படுத்தப்படுகின்றது.

மஹிந்த தரப்பிற்கு தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன கைதுகளும் இடம் பெறுகின்றன ஆனால் நிபந்தனைகள் அடிப்படையில் விடுதலைகளும் இடம் பெற்றுக் கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்க விடயம்.

எவ்வகையிலும் மஹிந்த கால ஆட்சியில் இடம் பெற்ற மிகப்பெரிய குற்றமாக கருதப்படுவது போர்க் குற்றமே.

தற்போது அரசினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் சாதூர்யமாக தப்பிக் கொண்டு வரும் மஹிந்த புதுக் கட்சி ஆரம்பித்தால் போர்க் குற்றம் பற்றிய ரகசியத்தையே ஜனாதிபதி வெளியிடுவார் எனவும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

இறுதி யுத்தத்தில் இறந்தாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி மஹிந்த அரசினால் நிருபிக்கப்பட்ட சான்றுகள் இன்று வரை வெளியிடப்பட வில்லை.

இதன் காரணமாக தொடர்ந்தும் பிரபாகரன் கொல்லப்படவில்லை உயிருடன் இருப்பதாகவே செய்திகள் வெளிவருகின்றன.

ஒருவேளை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இறுதி யுத்தத்தில் என்ன நிகழ்ந்தது? இறுதி யுத்தத்தின் உண்மையான தன்மை என்ன? கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு நிகழ்ந்தது என்ன? என்பதையே ஜனாதிபதி வெளியிடப்போகின்றாரா?

தற்போது வரை மஹிந்தவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அவர் நாட்டில் யுத்தத்தை நிறுத்தினார் என்ற காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் எடுபடாமல் செல்கின்றது.

இங்கு சிங்கள மக்களால் மன்னனாக வர்ணிக்கப்பட்டு வரும் மஹிந்தவிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு போர்க் குற்றம் மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளை வெளியிடப்படும் போது மஹிந்தவிற்கு உள்நாட்டில் வாழும் சாத்தியம் குறைந்து விடும் என்பதும் உண்மையே.

மஹிந்தவை அடக்க ரணில் மற்றும் ஜனாதிபதி வைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம் விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றிய உண்மையே எனவும் தற்போது சந்தேகங்கள் வழுப்பெற்று வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் இறுதியுத்தம் தொடர்பில் உண்மைகள் வெளிவரும் போது நாட்டு மக்களாலும் மஹிந்தவின் ஆதரவாளர்களினாலும் மஹிந்த தண்டிக்கப்படுவார்.

மாறாக மஹிந்தவினால் தற்போதைய ஆட்சிக்கு இடையூறுகளும், புதிய கட்சி எண்ணங்களும் உருவாகாமல் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்படும் போது நாட்டில் குழப்பம் ஏற்படும் அது சிலவேளை இனக்கலவரமாகவும் மாறிவிடலாம். அவ்வாறு ஏற்பட்டு விட்டால் அதற்கு நல்லாட்சி மட்டுமே பதில் கூறவேண்டும்.

அதன் காரணமாகவே தகுந்த நேரம் வரும் வரை இரகசியம் காப்பாற்றப்பட்டு வருகின்றது எனவும் எவ்வாறாயினும் தற்போது நாடு செல்லும் போக்கில் இறுதியுத்தம் தொடர்பில் மெது மெதுவாக உண்மைகள் புலப்படுத்தப்படும் எனவும் அரசியல் தரப்பு அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

சம்சுங்கின் புத்தம் புதிய Galaxy C9 கைப்பேசி தொடர்பாக வெளியான தகவல்கள்

Next Post

தோட்டத்தை விடுவிக்க பணம் கேட்கும் இராணுவம்

Next Post
தோட்டத்தை விடுவிக்க பணம் கேட்கும் இராணுவம்

தோட்டத்தை விடுவிக்க பணம் கேட்கும் இராணுவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures