Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இறுதி போர்க் குற்றங்களுக்கு ராஜபக்சக்களே நேரடிப் பொறுப்பு

February 2, 2021
in News, Politics, World
0

இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற ஏராளமான போர்க்குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌சவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்‌சவும் நேரடிப் பொறுப்புடையவர்கள். எனவே, இலங்கையின் மனித உரிமை மீறல்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ச அரசுக்கு நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 93 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திறந்த காயங்கள் மற்றும் பெருகி வரும் பேராபத்துக்கள் கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைத் தடுக்கும் இலங்கை’ என்ற தலைப்பில் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை வழங்கும் விதமாக ஐ.நாவின் தீர்மானம் அமைய வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றங்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வகையிலும், தற்போது நடைபெற்று வரும் துஷ்பிரயோகங்களைக் கண்டிக்கும் வகையிலும் குறித்த தீர்மானம் அமைய வேண்டும்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ச அரசுக்கு நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டும்.

இலங்கை அரசின் நீதி மீதான தாக்குதல்கள் இன்றும் எதிர்காலத்திலும் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும் அபாயத்தைக் காட்டுகின்றது.

இலங்கையில் இறுதிப் போரின்போது, பொதுமக்களைப் பாதுகாக்கும் ஐ.நாவின் நெறிமுறை சார்ந்த தோல்வி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலைகள், கற்பழிப்புகள் உட்பட ஏராளமான போர்க்குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌சவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்‌சவும் நேரடிப் பொறுப்புடையவர்கள்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச, போர்க்குற்றங்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உடைய அதிகாரிகளைப் பதவிகளுக்கு நியமித்ததோடு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றை மறுத்து வருகின்றார்.

இலங்கையின் ஊடகங்கள் சுய தணிக்கையோடு செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மீது இம்முறை கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றத் தவறுவது, உலகெங்கிலும் உள்ள அநியாயக்காரர்களுக்கு மோசமான செய்திகயைக் கொண்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

காவத்தமுனை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி

Next Post

தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் உடனடி கைது

Next Post

தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் உடனடி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அநுர அரசின் 2027 பட்ஜெட் சமர்ப்பிப்பு திகதி அறிவிப்பு

July 13, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்

July 13, 2026
இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures