இருவரின் தலையை துண்டித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்..!

பில்லி, சூனியம் வைக்கும் சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டி, ஐ.எஸ். தீவிரவாதிகள் இருவரின் தலைகளை துண்டித்துக் கொன்ற சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் காசா முனை பகுதியையொட்டி சூயஸ் கனவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள எகிப்து எல்லையில் சினாய் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து ஷரியா நீதிமன்றம் என்ற அமைப்பை உருவாக்கி, இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, இஸ்லாமிய சட்டதிட்டத்தை மீறியதாக பலரை கைது செய்து தண்டனை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் இஸ்லாமிய நெறிமுறைகளை மீறி பில்லி, சூனியம் வைப்பதாகவும், மக்களை மூடநம்பிக்கையின் பக்கம் திசை திருப்பிய இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்குமாறு உத்தரவிடுகிறேன் என ஷரியா நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பின் பிரதியை ஒரு தீவிரவாதி வசித்த நிலையில் இருவரின் கழுத்துக்கள் அறுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.isis01

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *