இராணுவ சதிப்புரட்சிக்கெதிராக கனடாவில் அணிதிரண்ட நூற்றுக்கணக்கான துருக்கிய சமூகத்தினர்!
கடந்த மாதம் துருக்கியில் முக்னெடுக்கப்பட்டிருந்த இராணுவ சதிப்புரட்சிக்கெதிராக கனடா எட்மன்டன் துருக்கிய சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஆல்பர்ட்டா சட்டமன்றம் கட்டிடத்திற்கு முன்னாள் அணிதிரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், துருக்கி நாட்டு கொடியை அசைத்தவாறு இச் சதிப்புரட்சிக்கெதிராக குரல் கொடுத்தனர்.
இந்த சதிப்புரட்சியானது, ஜனநாயகத்திற்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையாக அமைந்துள்ளதாக இப் பேரணியில் கலந்துக்கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.
ஜூலை 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையானது, அந்hட்டு மக்களின் ஒத்துழைப்புடன் அடுத்த நாள் தகர்த்தெறியப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 1,400 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.