இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நெருக்கடியில் ஐரோப்பியா
கடந்த எட்டு மாதங்களில் சுமார் மூன்று இலட்சம் அகதிகள் ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதாக இடம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பு கணக்கிட்டுள்ளது.
மேலும், பெருமளவிலானோர் கீரிஸ் மற்றும் இத்தாலி வழியாக நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐரோப்பியாவிற்கு அகதிகளாக வந்துள்ள 294,450 பேரில் 126,931 பேர் இத்தாலி வழியாகவும், 165,015 பேர் கீரிஸ் வழியாகவும் வந்துள்ளனர்.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அகதிகள் தொடர்பாக பெரும் நெருக்கடியை ஐரோப்பியா இப்போது எதிர்கொண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.