Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரணைதீவில் 186 ஏக்கர் காணி விடுவிப்பு; கடற்படை இணக்கம்

September 2, 2017
in News, Politics
0
இரணைதீவில் 186 ஏக்கர் காணி விடுவிப்பு; கடற்படை இணக்கம்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பின் முதற் கட்டமாக 186 ஏக்கர் காணியை விடுவிக்கவும் இதற்கென காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (31) பூநகரி பிரதான கடற்படை தளத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான தரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு படையினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது முதலில் இரணைத்தீவு காணிகளை விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். அத்துடன் இக் காணியை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்தனர்

இரணைதீவு பகுதி, தேசிய பாதுகாப்புக்கு முக்கிய ஒரு இடமாக இருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும் ராடர் கண்காணிப்பு நிலையங்கள் இருப்பதனால் இரணைத்தீவினுடைய வடக்குப் பகுதி முழுமையாகத் தேவையென்றும் கடற்படையினர் குறிப்பிட்டிருந்தனர்.

இதேவேளை அந்தப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றும் போது கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள கடல்வாழ் உயரினங்கள் அழிவடையும். அத்துடன், அங்கு குடிநீர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என குடியேறுவதை தடுக்கும் வகையில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்து 400 வருடங்களுக்கு மேல் இத்தீவிலே மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள், அவர்களது வாழ்வாதாரம் இங்கேதான் இருக்கின்றது. இத்தீவு விடுவிக்கப்படவேண்டுமெனவும் பாரளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் தெரிவித்ததையடுத்து, நீண்ட இழுபறிக்குப்பின்னர் இரணைத்தீவுப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 186 ஏக்கர் காணியை அடையாளப்படுத்துவதற்கு கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர். இதற்கான குழுவொன்றை நியமித்து அதன் மூலம் 186 ஏக்கர் காணியையும் அடையாளப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

இதேவேளை இப்பகுதி கடற்தொழிலாளர்கள் படகுகளை நிறுத்துவதற்கு 400 மீற்றர் கரையோரப்பகுதியையும் விடுவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரை மாத்திரம் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த வாரம் பூநகரிப் பிரதேச செயலாளர் மற்றும் இரணைமாதா நகரைச்சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் சென்று காணிகளை அடையாளப்படுத்துவதற்கு அனுமதி வழங்க கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இச் இச்சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Previous Post

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோரம்

Next Post

அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் நினைவூட்டப்படுகின்ற திருநாள்

Next Post
அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் நினைவூட்டப்படுகின்ற திருநாள்

அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் நினைவூட்டப்படுகின்ற திருநாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures