ஒன்ராறியோ- நயாகரா பிராந்தியத்திய ஹொட்டேல் ஒன்றிலிருந்து
கிட்டத்தட்ட 160 ஹொட்டேல் அறைகள் மற்றும் கடைகள் உணவகங்களிலிருந் வெளியேற்றம் செய்யப்பட்டதாக நயாகரா பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.
அபாயகரமான இரசாயன கசிவு ஏற்பட்டதானல் பாதுகாப்பு கருதி வெளியேற்றம் செய்யப்பட்டது.
நயாகரா பிராந்திய போக்குவரத்து பேரூந்துகளில் வெளியேற்றப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டனர். ஹொட்டேல் பணியாளர்கள் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களின் நிலைமை தெரியவரவில்லை.
எத்தகைய இரசாயன பொருள் சம்பந்தப்பட்டதென்பதை பொலிசார் வெளியிடவில்லை. ஆனால் இச்சம்பவம் ஒரு குற்றவியல் சம்பந்தப்பட்டதாக கருதப்படவில்லை.