பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அதை அண்டி வசிக்கும் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும்
பரந்தன் குமரபுரம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினருக்கு குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.
இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இரசாயனக் கழிவுகளின் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. பரந்தனில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துரைக்கும் போது எமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த தொழிற்சாலைகள் அழைக்கப்பட்டார் அதை நாம் எதிர்ப்போம் எனவும் கடந்த அரசாங்கத்திற்கு எம்மால் ஒரு திட்ட முன்மொழிவு கொடுக்கப்பட்டது.
பரந்தன் பகுதியில் வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பது தொடர்பில் கொடுக்கப்பட்டது எனவும் அவ்வாறு அமையப் பெற்றால் நாம் அந்த திட்டத்தை வரவேற்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பிரதேச சபையின் உறுப்பினர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

