Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை – ஜி.எல்.பீரிஸ்

September 4, 2021
in News, Sri Lanka News
0
இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை – ஜி.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை இலங்கை விவகாரத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள் நாட்டின் பொதுச்சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சட்டத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய முத்துறைகளும் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆகவே எதனையும் இரசகியமாக செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இம்மாதம் 12 ஆம் திகதியும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதியும் நடைப்பெறவுள்ளன. இவ்விரு கூட்டத்தொடர்களிலும் இலங்கை விவகாரம் நிச்சயம் கருத்திற் கொள்ளப்படும்.

மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கை விவகாரம் அதிகளவில் பேசப்படும். இம்முறை கூடவுள்ள கூட்டத்தொடரை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள் இலங்கையின் பொதுச்சட்டத்திற்கு  அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் காணாமல் போனார் விவகாரம்,  மீள்குடியமர்த்தல் மற்றும் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளார்.

ஆணைக்குழுவின் முதற்கட்ட அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையோரையும் விடுதலை செய்வற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையில்  பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆலோசனை சபையின் ஊடாக எதிர்காலத்தில்  சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்படும்.

பாராளுமன்றம், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறை ஆகிய பிரதான துறைகள சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆகவே எவ்விடத்தையும் இரகசியமாக செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளும் பாராளுமன்றில் விவாதிக்கப்படும். தேவையான விடயங்கள் ஊடங்களுக்கு வழங்கப்படும் என்றார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

தென்னாபிரிக்க கொவிட் வைரஸ் பிறழ்வும் இலங்கைக்குள் நுழையக்கூடும்!

Next Post

தென்னாபிரிக்க அணியின் தலைவராக கேசவ் மகராஜ்

Next Post
தென்னாபிரிக்க அணியின் தலைவராக கேசவ் மகராஜ்

தென்னாபிரிக்க அணியின் தலைவராக கேசவ் மகராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

October 13, 2026
பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

October 13, 2026
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா விவகாரம் : சட்டப்பேரவை தலைவரின் நடவடிக்கை செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

October 13, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

October 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures