Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனேஷியாவில் மீட்பு பணிகள் தீவிரம்

December 25, 2018
in News, Politics, World
0

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.  இந்தோனேஷியாவின் சுமத்ரா, ஜாவா தீவுகளுக்கு இடைப்பட்ட சுந்தா ஜலசந்தியில் அமைந்துள்ள அனாக் கிரகட்டாவ் எரிமலை கடந்த சனிக்கிழமை இரவு வெடித்து சிதறியது. இதனால் கடலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுனாமி ஏற்பட்டு, சுமத்ரா, ஜாவா தீவுகளின் கடற்கரையை ஒட்டிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஜாவா தீவின் பிரபல சுற்றுலா தலமான கேரிடா கடற்கரையை ஒட்டிய வீடுகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு தரைமட்டமாகின. மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சுனாமியில் சிக்கி 222 பேர் பலியானதாக நேற்று முன்தினம் கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பேரிடர் மீட்பு மைய செய்தித் தொடர்பாளர் சுடோபோ பர்வோ  நேற்று அளித்த பேட்டியில், ‘‘பலி எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. 1459 பேர் காயமடைந்துள்ளனர். 128 பேரை காணவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது’’ என்றார்.

சுனாமி அலைகள் தாக்கியதால் சுந்தா ஜலசந்தியை சுற்றிய பகுதிகள் முழுவதும் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவமும், போலீசாரும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியதால் மீட்பு பணியில் சிரமமும் ஏற்பட்டது.

இதற்கிடையே, கிரகட்டாவ் எரிமலை இன்னும் சீற்றத்துடனே காணப்படுகிறது. இதனால், ஆழ்கடலில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, மீண்டும் சுனாமி ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்படாமல், எரிமலை வெடிப்பதால் சுனாமி பேரலை ஏற்படுவது அபூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.

திபெத்தில் நிலநடுக்கம்
திபெத்தின் ஜிகேஜ் நகரின் ஜைடோங்க்மொயின் பகுதியில் நேற்று அதிகாலை 3.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.8 புள்ளியாக பதிவானதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சில வீடுகள் மற்றும் கால்நடை கூரைகள் இடிந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான தற்காலிக முகாம்கள், மருத்துவ உதவிகளை அரசு வழங்கி இருப்பதாகவும் சீன செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Previous Post

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலி

Next Post

ஆப்கானிஸ்தானில் கடும் வறட்சி: உணவு பற்றாக்குறை! லட்சக்கணக்கானோர் பாதிப்பு

Next Post

ஆப்கானிஸ்தானில் கடும் வறட்சி: உணவு பற்றாக்குறை! லட்சக்கணக்கானோர் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures