Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

July 29, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் புதன்கிழமை (29) கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் படகுகளில் கடலுக்குள் இறங்கிச் சென்ற தீவக மீனவர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனுவையும் விடுத்தனர்.

இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில், நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைத்தீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவ சமூகங்களாகிய தாங்கள், தங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப் பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீட்டை கோரியுள்ளனர்.

மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும், இது வெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப் பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப் பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில் தீவகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவர்களின் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு மீனவர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும் அதிகரித்துள்ளதாகவும், இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கின் பாரம்பரிய கடல்சார் வாழ்க்கை மரபு அழிந்துவிட்டால் அது வடக்கு மக்களுக்கு மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமையும் என்றும், கரையோர மீனவ சமூகங்கள் நாட்டின் கடல் எல்லைகள், கடல்வளம் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முக்கியமான சமூகமாக இருந்தபோதிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தங்களது போராட்டம் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதல்ல என்றும், இது கடலை நம்பி வாழும் குடிமக்களின் நீதிக்கான அமைதியான குரல் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு இழுவைப் படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடியைத் தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், பாரம்பரிய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும், கடல் உயிரினப் பல்வகைமை, மீன்வளம் மற்றும் நீலப் பொருளாதாரத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டும், வடக்கு மக்களுக்கும் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று சமமான சட்டப் பாதுகாப்பும் அரசின் கவனமும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் இறைமை இராஜதந்திரத்தாலும் ஆயுதப் படைகளாலும் மட்டும் பாதுகாக்கப்படுவதில்லை மக்களின் நம்பிக்கை, மனவுறுதி, பங்கேற்பு மற்றும் நாட்டின் மீதான பற்றுறுதியாலும் அது பாதுகாக்கப்படுகிறது.

வடக்கு இலங்கையின் பாரம்பரிய மீனவ சமூகங்கள் அரசின் புறக்கணிப்பால் மறைந்து போக அனுமதிக்காதீர்கள். கடலைப் பாதுகாப்போம். கடலை நம்பி வாழும் மக்களைப் பாதுகாப்போம். நாட்டின் கடல்சார் மரபைப் பாதுகாப்போம்.

மௌனத்தைவிட துணிவையும், தற்காலிக வசதியைவிட நீதியையும், குறுகியகால நலன்களைவிட நாட்டின் நீண்டகால நலன்களையும் தேர்ந்தெடுக்கும் தலைவரை வரலாறு நினைவுகூரும்” எனக் கோரிக்கை மனுவில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு | அநுர

Next Post

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

Next Post
காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

July 29, 2026
காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

July 29, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு | அநுர

July 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures