Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி யாழ் வருகை!

August 18, 2017
in News
0
இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி யாழ் வருகை!

இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ், சிறிலங்காவுக்கான நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் கொழும்பு வந்துள்ளது.
தென்பிராந்திய தலைமையக நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் வி.கே.சிங், லெப். ஜெனரல் ஹரிசின் இராணுவ செயலர் கேணல் கேளசல் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கும் இடையிலான பயிற்சி ஒத்துழைப்புகளை அதிகரிப்பது குறித்து இந்தப் பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
சிறிலங்கா இராணுவம் அண்மைய ஆண்டுகளில் நல்ல அனுபவங்களைப் பெற்றிருப்பதாகவும், சிறிலங்காவின் கொமாண்டோக்கள், சிறப்புப்படையினரிடமும் பயிற்சி மையங்களிலும் கூடுதலான இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி பயிற்றுவிக்க விரும்புவதாகவும் ஜெனரல் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் இயந்திர காலாட்படைப்பிரிவை உருவாக்கிய போது, இந்திய இராணுவத்தின் இயந்திர காலாட்படைப்பிரிவு வழங்கிய உதவிகளை சிறிலங்கா இராணுவத் தளபதி இதன் போது, நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், முப்படைகளின் தளபதிகள், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி, யாழ். படைகளின் தளபதி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி ஜெனரல் ஹரிஸ் நாளை யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இராச வீதி , கல்வியங்காடு பகுதியில், விடுதலைப் புலிகளுடனான சண்டையில் உயிரிழந்த இந்தியப் படையினர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தை சிறிலங்கா படையினர் துப்புரவு செய்து வருகின்றனர்.
இங்கு லெப்.ஜெனரல் ஹரிஸ் அஞ்சலி செலுத்தவுள்ளார் என்று தெரியவருகிறது.

Previous Post

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நலக் குறைவால் காலமானார்

Next Post

பிக்குவின் பெயரில் பாடசாலை!

Next Post

பிக்குவின் பெயரில் பாடசாலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

June 21, 2026
தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures