மியன்மார் -இந்திய எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிச்டெர் அளவில் ஆழமற்ற மற்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மிசோரத்தில் தென்கிழக்கில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கிலும், கிழக்கு இந்தியாவின் கொல்கத்தா வரையிலும் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) இணையதளத்திலும் கூறியுள்ளது.
நிலநடுக்கம் தொடர்பிலான உயிர் அல்லது உடைமை சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]